போலீசார் முன் சீமான் இன்று ஆஜராகவில்லை

by Staff / 09-09-2023 12:40:47pm
போலீசார் முன் சீமான் இன்று ஆஜராகவில்லை

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன்
அனுப்பிய நிலையில் இன்று ஆஜராக மாட்டார் என சீமான் தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தியிருந்த நிலையில், வெளியூர் செல்ல இருப்பதால், வரும் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆஜராவதாக சீமான் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருக்கின்றனர்.

 

Tags :

Share via

More stories