கன்னியாகுமரியில் சித்திரா பௌர்ணமி-திரண்டுவந்து மக்கள் கூட்டம்.

by Editor / 17-04-2022 02:39:04pm
கன்னியாகுமரியில் சித்திரா பௌர்ணமி-திரண்டுவந்து மக்கள் கூட்டம்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பௌர்ணமி தினத்தில்  புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உலகின் பல்வேறு பகுதிகளிலிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து குவிவது வழக்கம்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடிக்காணப்பட்ட குமரிகடல்பகுதிகள் சித்திரா பௌர்ணமியான நேற்று அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். 

 சித்ரா பௌர்ணமி தினத்தில் கன்னியாகுமரியில் சூரியன் மறைவதையும், அதே நேரத்தில் சந்திரன் உதிப்பதையும் ஒருசேர காண்பது  கண் கொள்ளாக் காட்சியாகும்.உலகத்திலேயே தென் ஆப்பிரிக்கா நாட்டிலுள்ள அடர்ந்த வனப்பகுதிமற்றும் கன்னியாகுமரிகடல்பகுதிஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இந்த அபூர்வக் காட்சியினை காண முடியும், 

இந்நிலையில் சித்ரா பௌர்ணமி தினமான நேற்று 16ஆம் தேதி ஆயிரக்கணக்காண சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடல் கரை பகுதியில் குவிந்தனர். மேற்கில் சூரியன் மறையும் காட்சியினையும் கிழக்கே சந்திரன் உதிக்கும் காட்சியினையும் காண்பதற்க்காக ஆவலோடு இருந்த நேரத்தில் ஒரே நேரத்தில் மேக மூட்டமாக இருந்ததால் அறைய கட்சியினை முழுமையாக காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரியில் சித்திரா பௌர்ணமி-திரண்டுவந்து மக்கள் கூட்டம்.
 

Tags :

Share via