தீவிபத்து எதிரொலியாக மீனாட்சி அம்மன் கோவிலில் -புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு

by Admin / 01-03-2019
தீவிபத்து எதிரொலியாக மீனாட்சி அம்மன் கோவிலில் -புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கோவிலின் வீரவசந்தராயர் மண்டபம் பகுதி முழுமையாக எரிந்து நாசமானது,

அதனை தொடர்ந்து அங்கு புதியதாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது, அதனை தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தார், இந்த தீயணைப்பு நிலையத்தின் சுழற்சி முறையில் 17 வீரர்கள் பணியாற்றுவர்கள் எனவும் கடந்த ஒரு வருடமாக தற்காலிகமாக தீயணைப்பு வாகனம் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது புதியதாக திறக்கப்பட்டுள்ள பட்டுள்ள திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. *புதுச்சேரி மாவட்ட புதிய ஆட்சியராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்* புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக வருவாய் சிறப்பு செயலராகவும் பணிபுரிவார் என தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் அறிவிப்பு . ஆட்சியர் பொறுப்பு வகித்து வந்த அபிஜித் விஜய் சவுத்ரி இந்துசமய அறநிலையத்துறையினு பொது நிர்வாகியாகவும், வக்பு வாரியம் மற்றும் சிறுபான்மை நலத்துறை, தீயணைப்புத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். திருமங்கலத்தில் உடற்பயிற்சி பள்ளியின் 61 வது ஆண்டுவிழா - வீரவிளையாட்டுகளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்பு (மிஸ்டர் திருமங்கலம் ஆணழகன் போட்டி நடைபெற்றது) மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அனுமான் உடற்பயிற்சி பள்ளியின் 61 வது ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது தமிழகத்தில் வீர விளையாட்டுக்கள் சிலம்பம் சுருள் வீச்சு கத்தி வீச்சு குஸ்தி மல்யுத்தம் கட்டாரி களரி உட்பட பல்வேறு வீரவிளையாட்டுகள் அழிந்து வரும் நிலையில் உள்ளது விளையாட்டுகளை இளைஞர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் அனுமான் உடற்பயிற்சி பள்ளியில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது பயிற்சிகள் மூலம் மன அமைதி புத்துணர்ச்சி பெற்று உடற்கட்டு உருவாகி ஆணழகனாக திகழ்கின்றனர் இப்பள்ளியில் சிறுவர்கள்முதல் முதியவர்கள் வரை பயிற்சியில் ஈடுபடுகின்றனர் இந்நிலையில் திருமங்கலம் அனுமான் உடற்பயிற்சி பள்ளியின் 61 வது ஆண்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இவ்வாண்டு விழாவில் பள்ளியின் முன்னாள் இன்னாள் மாணவ மாணவிகள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வீர விளையாட்டுகளான சிலம்பம் சுருள் வீச்சு கத்தி வீச்சு குஸ்தி மல்யுத்தம் கட்டாரி களரி சிறப்பாக செய்து காட்டினர் பின்னர் ஆணழகன் போட்டி நடைபெற்றது இதில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர் மேலும் தன்னுடைய உடற்கட்டு காட்டினர் இதில் வெற்றி பெற்ற கௌதம் மிஸ்டர் திருமங்கலம் பட்டத்தை வென்றார் முன்னதாக மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்ற வண்ணமுத்து சிறப்புத் தோற்றம் செய்து காட்டினார் மேலும் சிறப்பாக விளையாடியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்திய விமான படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமானின் தந்தை சிம்மகுட்டி வர்த்தமானை விமான படை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்திய விமான படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமானின் தந்தை சிம்மகுட்டி வர்த்தமானை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, ஸ்ரீ பெரும்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் , விமானபடை தலைமை அதிகாரி நாகராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தனர்.பின்னர் சென்னை மாநகர ஆணையர்u விஸ்வனாதன் நேரில் சந்தித்து பேசிவிட்டு பின்னர் காவல்துறையினரிடம் பாதுகாப்புகள் குறித்து பேசிவிட்டு சென்றார்.

Share via