இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்

by Editor / 24-04-2022 09:17:36am
இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

 மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை.இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள்.அரசு அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பரவலாக்கவும், மக்கள் கிராம அளவில் தாங்களே நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமை வார்த்தையளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன்,
அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது அவசியமாக உள்ளது.பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.

 

Tags : Today is National Panchayat Raj Day

Share via