பாராளுமன்றத்தேர்தல்

by Admin / 24-03-2019
பாராளுமன்றத்தேர்தல்

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளராக தென்காசி பாராளுமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இன்று செயல்வீரர்கள் மற்றும் ஆலோசனை கூட்டம் தென்காசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளராக தென்காசி பாராளுமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இன்று செயல்வீரர்கள் மற்றும் ஆலோசனை கூட்டம் தென்காசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பூத் கமிட்டியில் செயல்படுவது எப்படி, வாக்குகளை தவற விடாமல் கேன்வாஸ் செய்வது எப்படி என்கின்ற பல்வேறு விதமான ஆலோசனைகளை கட்சியினுடைய பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் விளக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது: தேசிய ஜனநாயகக் கூட்டணி தென்காசி தொகுதியில் மகத்தான வெற்றி பெறும் என்றார். மேலும் தென்காசி தொகுதியை பொறுத்தவரை முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கே வட மாநிலங்களைப் போல், வட மாவட்டங்களை போல் தொழிற்சாலைகள், ஐ.டி நிறுவனங்கள், உள்ளிட்ட எதுவுமே கிடையாது ஆகவே இந்த தொகுதி மக்கள் பயன்பெறும் வண்ணம் பட்டதாரிகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் இந்த பகுதியில் ஐடிக்கு நிறுவனங்கள் கொண்டு வர முயற்சி செய்வேன். மேலும் அந்தந்த பகுதிக்கு ஏற்ற தொழில்களை கொண்டு வருவேன். தென்காசியை மையமாக வைத்து தனி மாவட்டம் அமைக்கபப்டும், குற்றாலத்தை தேசியசுற்றுலா வரை படத்தில் இணைக்க செய்வேன். மேலும் இந்த தொகுதியில் விளையும் பூக்கள், காய்கறிகள், பழம் உள்ளிட்டவைகளை பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்குகள் இல்லாமல் உள்ளது. அதனை பாதுகாத்து விற்பனை செய்ய முயற்சி செய்வேன். மேலும் இந்த தொகுதியில் ஏராளமானோர் வெளிநாட்டில் உள்ளனர். வெளிநாட்டுக்குச் செல்ல பலர் பணம் கொடுத்து ஏமாந்து விடுகின்றனர். இந்த நிலையை மாற்றும் வண்ணம் மத்திய அரசு நிறுவனத்தை தென்காசி தொகுதியில் கொண்டு வருவேன்.

Share via