அரசுப் பேருந்துகளின் இயக்கம் பராமரிப்பு தனியாருக்கு வழங்க திட்டம்

by Staff / 06-05-2022 02:32:03pm
அரசுப் பேருந்துகளின் இயக்கம் பராமரிப்பு தனியாருக்கு வழங்க திட்டம்

இழப்பை  தவிர்க்க அரசு பேருந்துகளின் இயக்கம் பராமரிப்பு ஆகியவற்றை தனியாருக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. பேருந்து கொள்முதல் உதிரிபாகங்கள் வாங்குதல் இயக்கம் பராமரிப்பு ஆகியவற்றில் மொத்த ஒப்பந்தம் அடிப்படையில் அல்லது பொதுத்துறை தனியார் கூட்டு முறையில் செயல்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிர்வாகம் வருவாய் என போக்குவரத்து கழகங்கள் இடமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில்488 கோடி ரூபாய் வரை குறைந்ததை அடுத்து இத்தகைய முடிவு அரசு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பேருந்துகளின் இயக்கத்துக்காக கிலோமீட்டருக்கு இவ்வளவு தொகை என தனியார் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via