பெட்ரோல்.டீசல் விலை குறைப்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

by Editor / 21-05-2022 07:08:57pm
பெட்ரோல்.டீசல் விலை குறைப்பு  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய், பெட்ரோல் விலை ரூபாய் 9 ரூபாய் 50 காசும் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் பெறும் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பணவீக்கம் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை மீது மத்திய அரசு விதிக்கும் சார் சார்ஜ் பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை, பெட்ரோல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் சில்லறை விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 9ரூபாய் 50 காசும், டீசல் விலை7 ரூபாயும்   குறையும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக ஆண்டுக்கு 1இலட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுமெனவும் தகவல்.

 

Tags : Finance Minister Nirmala Sitharaman cuts petrol and diesel prices

Share via