மதுரை - தேனி-மதுரை புதிய ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது.

by Editor / 27-05-2022 09:10:12am
மதுரை - தேனி-மதுரை  புதிய ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது.

மதுரை - தேனி புதிய அகல ரயில் பாதை மற்றும் புதிய ரயில் துவக்க விழாவும், மதுரை ரயில் நிலைய மறு சீரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவும் சென்னையில் 26 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. பிரதமர்  நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இந்த திட்டங்களை துவக்கி வைத்தார்.

மதுரையில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, எம். பூமிநாதன், செல்லூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். மதுரையில் இருந்து புறப்பட்ட மதுரை - தேனி சிறப்பு ரயிலை பிரதமரோடு இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.மே 27 முதல் வழக்கமான ரயில் சேவை இன்று காலை முதல் துவக்கப்பட்டது.ஏராளமான பயணிகள் முதல் ரயில் பயணத்தை தொடங்கினர்.

மதுரை - தேனி இடையே ரயில் கட்டண விவரம் மதுரை - வடபழஞ்சி ரூபாய் 30 மதுரை - உசிலம்பட்டி ரூபாய் 30 மதுரை - ஆண்டிபட்டி ரூபாய் 35 மதுரை - தேனி ரூபாய் 45. மதுரை - தேனி நகரங்களுக்கு இடையே பேருந்து பயண நேரம் மற்றும் கட்டணம் ஆகியவற்றை விட ரயில் பயண நேரம் மற்றும் கட்டணம் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை - தேனி-மதுரை  புதிய ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது.
 

Tags : Madurai - Theni-Madurai new train service started today.

Share via