சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.134 குறைந்துள்ளது

by Editor / 01-06-2022 08:59:24am
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.134 குறைந்துள்ளது

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்து ரூ.2,373க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், டீ கடை, ஹோட்டல் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் இதனை சமாளிக்க பல கடைகளில் விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.134 குறைந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.2,373க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ரூ.1,018.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதன் காரணமாக டீக்கடை வியாபாரிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

 

Tags : The price of a cylinder for commercial use in Chennai has come down by Rs 134 today

Share via