சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

by Editor / 11-07-2019 07:14:40pm
சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இராணுவ கிராமத்தில் சிறுமிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இராணுவ கிராமத்தில் சிறுமிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 4 வயது சிறுமியை அவரது உறவினரான முன்னால் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இந்நிலையில் அந்த சிறுமியின் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் தேவன்பட்டி என்ற ராணுவ கிராமத்தில் அந்த சிறுமிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் மீனாட்சிபுரம், சொக்கலிங்கபுரம், பெருமாள் தேவன்பட்டி உள்ளிட்ட 5 கிராமத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சிறுமியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இந்த கூட்டத்தில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.

Share via