திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பெயரில் போலி முகநூல் கணக்கு நம்ப வேண்டாம் என ஆட்சியர் விளக்கம்.

by Editor / 11-06-2022 09:20:18am
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பெயரில் போலி முகநூல் கணக்கு நம்ப வேண்டாம் என ஆட்சியர் விளக்கம்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தை போன்ற போலி கணக்கு உருவாக்கப்பட்டதால் அதிர்ச்சி.இந்த போலியான முகநூல் பக்கத்தை நம்ப வேண்டாம் என ஆட்சியர் விளக்கம். 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் முகநூல் பக்கத்தை போன்று போலி கணக்கை உருவாக்கி 6378370419 என்கிற எண்ணிலிருந்து வாட்ஸ் அப் கணக்கு தொடங்கி மாவட்ட ஆட்சியர் போன்று அமேசான் மூலம் பணம் கேட்டு நிர்பந்தித்தாக தகவல்.அமேசான் கிப்ட் குறித்த விளம்பரங்களை அனுப்பி அமேசானில் பொருட்களை வாங்க அரசு ஊழியர்களை நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நான் எந்த எண்ணிலிருந்து யாருக்கும் எந்தவித பண உதவியும் கேட்டு மெசேஜ் செய்வதில்லை.தயவு செய்து இது போன்ற போலியான மற்றும் மோசடியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags : Do not believe the fake Facebook account in the name of Collector Gayatri Krishnan.

Share via