ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ்  சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

by Editor / 27-05-2021 05:39:00pm
 ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ்  சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

 


ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கபப்ட்டுள்ளது.
அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து பென்ஷன் வாங்கக் கூடிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் வழக்கமாக உயிர்வாழ் சான்றிதழ் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பார்கள்.
ஆனால், கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை காரணமாக ஓய்வூதியதாரர்களின் உடல்நலம் கருதி உயிர்வாழ் சான்றிதழை ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஒப்படைக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான உயிர்வாழ் சான்றிதழையும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு பதிலாக ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஒப்படைக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்க கூடிய வகையில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருப்பதால் அவருடைய நலன் கருதி தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

 

Tags :

Share via