எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி

by Editor / 28-06-2022 04:02:49pm
எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் கொரோனோ தோற்று மீண்டும் தலைதூக்கத்தொடங்கியுள்ளதால் மத்திய ,மாநில அரசு இதில் தீவீரம் கட்டத்தொடங்கியுள்ளது.இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு  கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய நிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிகருணாநிதிக்கும்  கொரோனா தொற்று உறுதியாகி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின்  மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதுதவிர, எடப்பாடி பழனிசாமியின்  உதவியாளர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனதகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags : Radha, wife of Edappadi Palanisamy, has been diagnosed with corona infection

Share via