கேரளாவில் 8ம் வகுப்பு மாணவியை மிரட்டிய வாலிபர் கைது 

by Editor / 29-05-2021 06:54:36pm
கேரளாவில் 8ம் வகுப்பு மாணவியை மிரட்டிய வாலிபர் கைது 

 


திருவனந்தபுரம் அருகே பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி 8ம் வகுப்பு மாணவியின் மார்பிங் படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
 திருவனந்தபுரம் அருகே ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் வினீஷ்குமார்(22) இவர் பேஸ்புக்கில் ஒரு பெண்ணின் பெயர் மற்றும் போட்டோவை பயன்படுத்தி போலி கணக்கு தொடங்கி உள்ளார். இந்த நிலையில் அவருக்கு அந்த பேஸ்புக் மூலம் இடுக்கி மாவட்டம் எருமப்பட்டி பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமி பிரவீனை பெண் என நினைத்து தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
 இந்த நிலையில் பிரவீன் பேஸ்புக்கில் இருந்து அந்த சிறுமியின் புகைப்படத்தை எடுத்து மார்பிங் செய்து நிர்வாணமாக மாற்றியுள்ளார். பின்னர் அந்த போட்டோவை சிறுமிக்கு அனுப்பி வைத்து மிரட்டத் தொடங்கினார். அந்த சிறுமி தன்னை நிர்வாணமாக படம் எடுத்து தனக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், தனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனவும் பிரவீன் வற்புறுத்தி வந்துள்ளார். இல்லையேல் தன்னிடமுள்ள அந்த சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் இந்த ஆபாச மிரட்டலுக்கு சிறுமி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், சிறுமியின் மார்பிங் செய்த ஆபாச புகைப்படங்களை அவரது தோழிகள் மற்றும் நண்பர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
 இதைப் பார்த்த அந்த சிறுமியின் தோழியான ஒருவரின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவர் உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ந்து போன பெற்றோர் எருமப்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபரின் பேஸ்புக் கணக்கு போலியானது என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பேஸ்புக் நிறுவனத்தை  தொடர்புகொண்டு வாலிபரின் உண்மையான பெயர் முகவரியை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் வினீஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via