காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் செல்லலாம் -வேலூர் எம்.பி.அறிவிப்பு

by Editor / 30-06-2022 10:08:22pm
காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் 1 ஆம் தேதி முதல்  இருசக்கர வாகனங்கள் செல்லலாம் -வேலூர் எம்.பி.அறிவிப்பு

காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிக்காக இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் மூடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முடிவடைந்ததால் நாளை 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதாக வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
 மேலும் நான்காம் தேதி முதல் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் பயணிக்கவும் அனுமதிக்கப்படுகிறது என்றும்,மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்குப் பின் கனரக வாகனங்கள் மேம்பாலத்தில் பயணிக்க அனுமதிக்கப்படும் என வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார்.

 

Tags : Two-wheelers will be allowed on Gadpadi railway flyover from 1st - Vellore MP notification

Share via