காரைக்காலில் கெட்டுப்போன 150 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்

by Editor / 03-07-2022 03:23:06pm
காரைக்காலில் கெட்டுப்போன 150 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்

 காரைக்கால் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 150 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களில் நோய் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கட்டுப்படுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். பல உணவகம் மற்றும் இறைச்சிக் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், கெட்டுப்போன இறைச்சியைப் பதுக்கி வைத்து சமையலுக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து, அத்தகைய கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் சுமார் 150 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளைப் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இறைச்சிகளை விற்க முயன்ற கடைகளுக்கு அபராதம் விதித்தனர். 

 

Tags :

Share via