புளியரை தக்ஷிணாமூர்த்தி ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா.

by Editor / 01-05-2024 10:41:08pm
புளியரை  தக்ஷிணாமூர்த்தி ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள புளியரையில் அமைந்துள்ளது அருள்மிகு சிவகாமி அம்பாள், சமேத சதாசிவமூர்த்தி, அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி ஆலயம். இந்த ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா மதியம் 3 57 மணிக்கு வியாழ பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசித்தர்.தட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதன் முன்னதாகதொடர்ச்சியாக 29ஆம் தேதி திங்கள் கிழமை காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் அபிஷேகம் தீபாராதனையோடு திருவிழா துவங்கியது.  லட்சார்ச்சனையும் துவங்கியது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு லட்ச்சார்ச்சனைக்கு உரிய கட்டடங்கள் செலுத்தி அதில் கலந்து கொண்டனர்.

 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக  ஹோமம், சுதர்சன ஹோமம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை, மாலை 5 மணிக்கு சிறப்பு மேளம், மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை, உள்ளிட்டவைகள்  நடைப்பெற்றன.
 இன்று புதன்கிழமை காலை நாம சங்கீர்த்தனம், 11 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை. பூஜைகளும் பகல் 11:30 மணிக்கு ருத்ர ஏகாதேசி ஆகியவை நடைபெற்றன்றன, இதன்  தொடர்ச்சியாக மாலை 3.57 மணிக்கு  மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு  குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது இதனை தொடர்ந்து. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றன, இதற்கான ஏற்பாடுகளை இணைக்கப்பட்ட இணைக்கப்படாத திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்து வருகின்றனர்.மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகளை ஆயிரம் பக்தர்கள் வரிசையில் நின்று சிறப்பாக தரிசனம் செய்து சென்ற வண்ணம் உள்ளனர் மேலும் இந்த சிறப்பு பூஜையில் மாவட்டத்தினுடைய காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பு தரிசினத்தை முடித்து சென்று வண்ணம் உள்ளனர். குரு பெயர்ச்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அபிஷேகம் தொடங்கியது பால், பன்னீர், தயிர் பஞ்சாமிர்தம்,சந்தனம்,தேன், மஞ்சனம், இளநீர் திருநீறு உள்ளிட்ட 16 வகையான பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து தற்பொழுது சுவாமி அலங்காரம் நடைபெற்று வருகிறது இன்னும் சற்று நேரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசன செய்தனர்.

 

Tags : புளியரை தக்ஷிணாமூர்த்தி ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா.

Share via