இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

by Editor / 16-07-2022 08:29:45am
இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

 சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆடி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளில் திறக்கப்படுவது வழக்கம்.இதன் தொடர்ச்சியாக ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். வழக்கமான பூஜை, வழிபாடுகளுக்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து 5 நாட்கள் ஆடி மாத சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது.

 

Tags : Opening of Sabarimala Ayyappan temple today

Share via