முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.40 அடியை தாண்டியது வெள்ள அபாய எச்சரிக்கை

by Editor / 16-07-2022 10:07:39pm
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.40 அடியை தாண்டியது வெள்ள அபாய எச்சரிக்கை

 முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்துவருவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் இந்நிலையில்  16.07.2022 இன்று மாலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 135.40 அடியாக உயர்ந்தது. 

 இதனையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜுக்கு முதல் அபாய எச்சரிக்கை தகவலை அனுப்பி உள்ளனர். ஆகையால் முல்லைப்பெரியார் உபரி நீர் செல்லும் மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு முதல் வெள்ள எச்சரிக்கை(ஃபர்ஸ்ட் வார்னிங்) விடுத்துள்ளனர்

 அதில், குறிப்பிட்டுள்ளதாவது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று  மாலை 6 மணியளவில் 135.40 அடியாக அதிகரித்துள்ளது. உபரி நீர் வழிந்தோட தயாராக உள்ளதால் எனவே கரையோர பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
 

 

Tags : The water level of Mullaip Periyar dam has crossed 135.40 feet and there is a flood warning

Share via