கமலுக்கு நன்றி : நடிகர் சூர்யா

by Editor / 18-07-2019 08:14:49pm
கமலுக்கு நன்றி : நடிகர் சூர்யா

புதிய கல்வி கொள்கை தொடர்பான என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கமலுக்கு நன்றி

கமலுக்கு நன்றி : நடிகர் சூர்யா

அறக்கட்டளையின் நாற்பதாவது ஆண்டு விழாவில்  பேசிய நடிகர்  சூர்யாவுக்கு கமல் ஆதரவை தெரிவித்தார்.

முரண்பாடான சிந்தனை இந்தியாவில் உயர்கல்வி சேர்வோரின் எண்ணிக்கை ( Gross Enrolment Ratio ) 25 . 8 சதவிகிதம்தான் . இதை 2035- ம் ஆண்டுக்குள் 52 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் ' என்கிறது தேசிய கல்விக் கொள்கை . சீனாவில் இப்போதே இது 51 சதவிகிதமாகவும் , அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் 80 சதவிகிதமாகவும் இருக்கிறது . இந்தியாவில் இளைஞர்கள் கல்லூரியில் சேர்வதும் குறைவாக உள்ளது . அதைவிட அவர்கள் படிப்பை முடித்து பட்டம் பெறுவதும் சவாலாக உள்ளது . அப்படி பட்டதாரிகளாக மாறுபவர்களும் , வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற தகுதியுடன் இருப்பதில்லை என்பது இன்னொரு கூடுதல் பிரச்னை . ' உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் ' என்கிற இந்த வரைவு அறிக்கையில் , அதற்கான அடிப்படை வசதிகளை எப்படி ஏற்படுத்துவது என்பதை பற்றி எந்த விளக்கமும் இல்லை . பலவிதமான நுழைவுத் தேர்வுகளைக் கட்டாயம் ஆக்கியும் , அருகாமையிலுள்ள கல்வி நிலையங்களை மூடியும் , கிராமப்புற அடித்தட்டு மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் நிலையில் , மாணவர்களின் எண்ணிக்கையை எப்படி இரண்டு மடங்கு உயர்த்த முடியும் ? கிராமப்புற மாணவர்களை மனதில் கொண்டார்களா ? இந்த வரைவுக் கொள்கையை வெளியிடுவதற்கு முன்பு ,திரு . கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினர் எந்த அரசு தொடக்கப்பள்ளியையும் நேரில் சென்று பார்த்ததாகத் தெரியவில்லை என்கின்றனர் கல்வியாளர்கள் . ஒரே ஒரு மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளுடனும் , ஒரேயொரு ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகளுடனும் உரையாடியுள்ளதாக தெரிகிறது . மும்பை , டெல்லி , பெங்களூரு போன்ற ஒருசில ' பெருநகரங்களின் ' பயிலும் மாணவர்களை மனதில் கொண்டு , இந்தியாவின் இரத்த நாளங்களாக இருக்கும் கிராமப்புற மாணவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளாமல் விடுவது ஆபத்தானது . அநீதியானது . | * இந்தக் குழுவினர் இப்போதாவது கிராமப்புற அரசுப் பள்ளிகளைச் சென்று பார்க்க வேண்டும் . அங்குள்ள அரசுப் பள்ளிகளில் இருக்கும் சிக்கல்களை உணர வேண்டும் . அங்கே இருக்கும் கற்றல் உபகரணங்கள் என்னென்ன , என்னவிதமான கற்பித்தல் முறை பின்பற்றப்படுகிறது என்றெல்லா ம் க வ னி க்க வேண்டும் . இதே போல அ ர சுக் கல்லூரி க்கும் அரசு பல்கலைக்கழகங்களுக்கும் சென்று பார்வையிட வேண்டும் . காலங்கால மாக கல்வி உரிமைக்காகப் போராடிவரும் இயக்கங்கள் , கல்வியாளர்கள் கருத்துகளுக்குக் காது கொடுத்து கேட்க வேண்டும் என அகரம் பவுண்டேஷன் கேட்டுக்கொள்கிறது . கல்வி மாநிலங்களின் உரிமை . கல்வி என்பது மாநிலங்களின் உரிமை . அதை முழுவதுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் முயற்சியால் ஏழை மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறும் . மாநிலங்களின் செயல்திறனின் குறை இருந்தால் அது களையப்பட வேண்டுமே தவிர , அதிகாரத்தை கைமாற்ற அதை காரணமாக மாற்ற முடியாது . பல்வேறு இன , மொழி , பண்பாட்டு வித்தியாசங்கள் உடைய ஒரு நாட்டில் , ஒற்றைத்தன்மை பார்வையுடன் செயல்படக்கூடாது . நாட்டின் அஸ்திவாரமாக விளங்கும் கல்வியில் , அதிகாரமோ அரசியலோ நுழையக்கூடாது

 

 தேசிய கல்வி க் கொள்கை வரைவு அறிக்கை மீது பொது மக்கள் ஜூலை 31 வரை கருத்து தெரிவிக்கலாம் . கருத்து தெரிவிப்பதற்காக , இந்த வரைவு அறிக்கை https : / / innovate . mygov . in / new - education - policy - 2019 / என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . நம் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் இந்தக் கல்விக் கொள்கை பற்றி ஆக்கபூர்வமான விவாதங்கள் அனைத்து தரப்பினராலும் முன்னெடுக்கப்பட வேண்டும் . கல்வியாளர்கள் , ஆசிரியர்கள் , அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் , ஊடகங்கள் , பொது மக்கள் என அனைவரும் , ஒன்றிணைந்து ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்க வேண்டும் என்று அனைவரையும் அகரம் பவுண்டேஷன் பணிவுடன் வேண்டுகிறது . மாணவர்களின் நலனே முக்கியம் . முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கல்வி கொள்கை வரைவு அறிக்கை இந்தியிலும் , ஆங்கிலத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது . தமிழ் உள்ளிட்ட மற்ற தேசிய மொழிகளில்கூட அரசு மொழியாக்கம் செய்யவில்லை . இந்த அறிக்கை மீது கருத்துகள் தெரிவிக்க ஒரே மாதம் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது . , பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை வரவே , மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது . நாடு முழுவதும் கல்வியாளர்கள் , ஆசிரியர்கள் , அறிஞர்களுடன் கலந்துரையாடல் நடத்தி , விரிவான விவாதங்களுக்குப் பிறகே இக்கல்வி கொள்கை நடைமுறைக்கு வரவேண்டும் . எந்த நெருக்கடிக்கும் அடிபணியாமல் மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டு செயல்படுவோம் . அன்புடன் , சூர்யா , நிறுவனர் , அகரம் ஃபவுண்டேஷன் .

 

 புதிய கல்வி கொள்கை தொடர்பான என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கமலுக்கு நன்றி :நடிகர் சூர்யா   தனது கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய கமலுக்கும் , மக்கள் நீதி மய்யத்திற்கும் நன்றி .