26 கிலோ அரிசி பேக்கிங் விற்பனைக்கு வர தொடங்கியது.

by Editor / 02-08-2022 01:13:40pm
 26 கிலோ அரிசி பேக்கிங் விற்பனைக்கு வர தொடங்கியது.

47 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5% வரி விதிப்பை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி 25 கிலோ வரையிலான பேக்கிங் செய்யப்பட்ட Brand & Non brand அரிசிகளுக்கு 5% வரி விதிக்கப்பட்டதால் அரிசியின் விலை கூடுதல் ஆனது.

ரகத்திற்கு ஏற்றபடி அரிசி உள்ள நிலையில் , தோராயமாக 1000 ருபாய்க்கு விற்கப்பட்ட 25 கிலோ அரிசி பேக்கிங் , 5% வரி விதிப்பிற்கு பிறகு 50 ருபாய் உயர்ந்து 1050 க்கு விற்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய முயற்சியாக 26 கிலோ அரிசி பேக்கிங் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.உணவு துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் பேசிய பின்பே இந்த 26 கிலோ பேக்கிங் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். 25 கிலோ அரிசி பேக்கிங்கிற்கு பதிலாக 1 கிலோ கூடுதலாக வைத்து 26 கிலோ பேக்கிங் செய்யும் போது மக்களுக்கு 50 ருபாய் குறைவாக கொடுக்க முடியும் என்கின்றனர்

 

Tags : 26 kg rice packing has started going on sale.

Share via