காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க குவியும் பக்தர்கள்

by Editor / 20-07-2019 06:13:41pm
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க குவியும் பக்தர்கள்


     நேற்று காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்தவர்களில் 4 பக்தர்கள் இறந்தனர் 100-க்கும் மேற்பட்டவர்கள் மயக்கம் அடைந்தனர்...

108 திவ்ய தேசங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில்.


    ந்த கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தினமும் ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர் 40 நாட்கள் நடைபெறும் காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 19 ஆம் நாளான இன்று  அத்திவரதர்  நீலவண்ணப் பட்டைக் கொண்டும் வெட்டிவேர் மாலை ஏலக்காய் மாலை உள்ளிட்டவற்றைக் கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நேற்று காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்தவர்களில் 4 பக்தர்கள் இறந்தனர் 100-க்கும் மேற்பட்டவர்கள் மயக்கம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து இன்று தரிசனத்துக்கு மேலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேற்று மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் 18 நாட்களில் மொத்தம் 28 லட்சத்துக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். 

 

Share via