நாடு முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை

by Editor / 13-08-2022 04:07:10pm
நாடு முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் இன்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.பொதுமக்கள் ஆர்வம் காரணமாக இதுவரை மொத்தம் இந்தியா முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை ஆகி உள்ளதாக கலாச்சார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

Tags :

Share via