ஒண்டிவீரன் புகழை போற்றுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த ஒண்டிவீரன் புகழ் போற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் திமுகவினர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய புகைப்படங்களை பதிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அதில், வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்.
2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர் ஆட்சி.ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்.
Tags :