சென்னையில் இரண்டாவது விமான நிலையம் எங்கே .. முடிவுஎடுப்பதில் குழப்பம்...?

by Editor / 29-08-2022 08:37:10pm
 சென்னையில் இரண்டாவது விமான நிலையம் எங்கே .. முடிவுஎடுப்பதில் குழப்பம்...?

இந்தியாவின் தொழில் வளர்ச்சிபெற்றுவரும் நகரங்களில்  சென்னை முக்கிய பங்காற்றிவருகிறது.இங்கு நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்பவும்,தொழில்துறை வளர்ச்சி காரணமாகவும், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்களின் வருகை அதிகரித்து வருகிறது.இந்த வளர்ச்சிக்கேற்ப சென்னை மீனம்பாக்கம்  பன்னாட்டு விமான நிலையம்  விரிவாக்கம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அதே நேரத்தில், நிர்வாக காரணங்களுக்காக சென்னையில் மேலும் ஒரு விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான இடத்தை பரிந்துரைக்குமாறும் மாநில அரசிடம் மத்திய அரசு கோரி இருந்தது. மேலும் சென்னைக்கு வந்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் குழு பன்னூர், பரந்தூர், திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டது. 

இந்நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் எங்கு அமையப்போகிறது என்பதற்கான முடிவு ஜூன் 17 ஆம் தேதி எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெயியாகி உள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமையும் இடத்தை முடிவு செய்யும் ஆலோசனை கூட்டம் ஜூன் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. 

மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராத்ய சிந்தியா தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு பங்கேற்க உள்ளது. இரண்டாவது விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் சில அரசியல்கட்சிகள் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு இடங்களில் ஒன்று முடிவான பிறகு, அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Tags :

Share via