கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

by Editor / 03-09-2022 09:12:20am
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11.40 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். அவருடன் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, முதலமைச்சரின் தனி செயலாளர்கள் த.உதயச்சந்திரன், அனுஜார்ஜ், முதன்மை தனி உதவியாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் சென்றனர். கோவளம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது சால்வை அணிவித்ததுடன், திராவிடன் மாடல் புத்தக ஆங்கில பிரதியையும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர்கள் கூட்டம் முடிந்தவுடன் கேரள அரசின் சார்பில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகளிக்கிறார். அதைத்தொடர்ந்து, இரவு 7 மணியளவில் அங்கிருந்து விமானம் மூலம் அவர் சென்னை திரும்புகிறார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
 

Tags : பினராயி விஜயனுடன் -மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Share via