பிரதமர் மோடியை மிரட்டக்கூடிய இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார் - கனிமொழி பேச்சு

by Admin / 22-03-2024 10:08:24am
பிரதமர் மோடியை  மிரட்டக்கூடிய இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார் - கனிமொழி பேச்சு

இந்தியா கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டம் கோவில்பட்டி உள்ள மந்திதோப்பு சாலையில்  சர்க்கஸ் மைதானத்தில்  வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தி.மு.க., துணை பொது செயலாளர் கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

நாடு முழுவதும் மக்களுக்கு, தமிழர்களுக்கு எல்லாம் எதிரான ஆட்சியை அகற்றவும், மக்களை பாதுகாக்கும் நிலை ஏற்படும். மணிப்பூரில் 2 பெண்கள் தொங்கவிட்டு, கொடுமைப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர். 

இன்றுவரை அதில் நியாயம் கிடைக்கவில்லை. ஒரு முறைகூட பிரதமர் மோடி செல்லவில்லை. தமிழகத்துக்கு 4 முறை வந்துவிட்டார். இங்கே தங்கிவிடுவார் போல. சென்னை, துாத்துக்குடி, நெல்லை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினாரா?. 

உதவிக்கரம் நீட்டினாரா?. 2 அமைச்சர்களை அனுப்பினார். சுற்றினார்கள். போய்விட்டார்கள். இன்றுவரை 1 ரூபாய் வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 4 லட்சத்தில் வீடு வழங்கியது ஸ்டாலின் அரசுதான். 

பாதிக்கப்பட்டவர்களுக்க ரூ. 6 ஆயிரம், ஆடு, மாடு இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதுதான் மக்களுக்கு ஆதரவாக இருக்கும் ஆட்சி. நாம் 1 ரூபாய் வரியாக கொடுத்தால், 26 காசு கொடுக்கிறார்கள். உ.பி.,யில் 1 ரூபாய் கொடுத்தால் 2 ரூபாய் 2 காசு கொடுக்கிறார்கள். 

என்ன நியாயம், தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன. 

பிரதமர் மோடி தி.மு.க.,வை அழித்துவிடுவேன். இல்லாமல் செய்துவிடுவேன் என்கிறார்கள். இதைக்கூறிய எத்தனையோ பேர் இல்லாமல் போய்விட்டனர். தி.மு.க., இன்றும் இருக்கிறது. 

பிரதமர் மோடியை மிரட்டக்கூடிய இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலினுக்கு பயப்படுகிறீர்கள்.  

தமிழகத்தில் கவர்னர் ரவி தத்துவங்களை சொல்கிறார். சட்டசபையில் படிக்க சொன்னால் வாக் அவுட் செய்கிறார். பொன்முடியை மீண்டும் மந்திரி ஆக்க மாட்டேன் என்றார். வானாளாவிய அதிகாரம் உள்ளதாக நினைக்கிறார்.

சுப்ரீம் கோர்ட் அவரை வைத்து செய்துவிட்டது. சட்டம் தெரியாதவர்களை வைத்து ஆட்சி செய்ய நினைக்கிறது பா.ஜ., தி.மு.க., வாக்குறுதி அளித்தால் நிறைவேற்றி தரும் என கூறினார்.

பிரதமர் மோடியை  மிரட்டக்கூடிய இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார் - கனிமொழி பேச்சு
 

Tags :

Share via