காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சுங்கசாவடியில் வாகனங்களை நிறுத்தி போராட்டம்

by Editor / 09-09-2022 12:02:06pm
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சுங்கசாவடியில் வாகனங்களை நிறுத்தி போராட்டம்

சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சுங்கசாவடியில் வாகனங்களை நிறுத்தி போராட்டம்

ராகுல்காந்தி நடைபயணத்திற்கு சென்ற மதுரையை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சென்ற வாகனத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் சாலைப்புதூர் சுங்க சவாடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 20நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புதன்கிழமை கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணத்தினை தொடங்கியுள்ளார். இந்த நடைபயணத்தினை கலந்து கொள்ள மதுரையில் இருந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிள் கடந்த புதன்கிழமை கன்னியாகுமாரிக்கு சென்றுள்ளனர். அப்போது சுங்கசாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் சாலைப்புதூர் சுங்கசவாடியில் மட்டும் ஒரு வாகனத்தில் பாஸ்டேக் மூலமாக 380 ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கன்னியாகுமாரிக்கு சென்று வாகனங்கள் இன்று இரவு மதுரைக்கு திரும்பியுள்ளனர். அப்போது கயத்தார் சாலைப்புதூர் சுங்கசாவடிக்கு வந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் எப்படி பணம் எடுக்கலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி வாகனங்களை சுங்கசாவடி முன்பு நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.இது குறித்து தகவல் கிடைத்ததும் கயத்தார் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையெடுத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாகனத்தினை எடுத்து சென்றனர். போக்குவரத்து மீண்டும் சீராகி வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன.

 

Tags :

Share via