எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பார்க்கலாம்

by Staff / 18-09-2022 02:20:59pm
எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பார்க்கலாம்

தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா நேற்று தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் கொண்டாடினர். பெரியாரின் பிறந்தநாள் விழாவையொட்டி சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்நிலையில் கோவையில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்களுடன் "எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பார்க்கலாம்" என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. கோவை பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த சுவரிட்டி பார்க்க முடிந்தது.

 

Tags :

Share via