அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் தொடர்ந்து நின்று செல்லும்

by Editor / 19-09-2022 12:59:53pm
அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் தொடர்ந்து நின்று செல்லும்

மதுரை - திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16344/16343) மறு அறிவிப்பு வரும் வரை ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். ஏற்கனவே ஜூன் 16 முதல் இந்த ரயில்கள் பரிசோதனை அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு நின்று சென்ற நிலையில்  மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம்  செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஒட்டன்சத்திரத்தில் முறையே காலை 07.50 மணிக்கு மற்றும் மாலை 05.30 மணிக்கும் நின்று  புறப்படும் என  ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via