தாண்டியாநாட்டியமாடி நவராத்திரி பண்டிகை கொண்டாட்டம்,

by Editor / 28-09-2022 12:12:41am
தாண்டியாநாட்டியமாடி நவராத்திரி பண்டிகை கொண்டாட்டம்,

நவராத்திரி பண்டிகையை நேற்று 26ஆம் தேதி கோலாகலமாக நாடுமுழுவதும் தொடங்கியதை முன்னிட்டு குஜராத்  சமூக மக்கள் தாண்டியா நடனம் ஆடி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நவராத்திரித் திருவிழாவின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள பிரானுர் பார்டரில் உள்ள குஜராத் கடுவா பாட்டிதார் சமாஜ் சமூக மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.இங்குள்ள அந்த சமூகத்தினரின் திருமண மண்டபத்தில்  இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமாக தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

தசரா பண்டிகையின் போது 10நாட்களும் துர்காதேவியை வழிப்பட்டால் தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.நவராத்திரி பண்டிகை முன்னிட்டு, வட இந்தியாவில் தாண்டியா என்ற கோலாட்டம் நடன நிகழ்ச்சி 9 நாட்களும் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.30 மணி வரை நடைபெறுகிறது.

திருமணமான மற்றும் திருமணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் என்று ஆயிரக்கணக்கானோர் துர்கை உள்ளிட்ட பல்வேறு அம்மன் பாடல்களை ஒரு குழுவினர் பாடுவார்கள். அந்த பாடல்களுக்கு ஏற்ப, பாரம்பரிய நடனத்தை ஆண்களும், பெண்களும் வரிசையாக ஆடுவது வழக்கம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பிரானுர் பார்டரில் குஜராத் மாநிலத்தவர்கள்  ஏராளமானோர் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர்கள் தசாராவை அவர்களது சொந்த மாநிலமான குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடுவது போல இங்கு பல ஆண்டுகாலமாக பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். கோரோனோ பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளாமாக கொண்டாடமுடியாமல் இருந்த நவராத்திரியை இந்தாண்டு சிறப்பாயாக கொண்டாடத்தொடங்கியுள்ளனர்.விடிய விடிய தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

10 நாள்கள் நடைபெறும் தசரா விழாவில் தினமும் இரவு முழுவதும் தாண்டியா ஆடி மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். வண்ண உடைகள் அணிந்து வடஇந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தாண்டியா நடனம் ஆடியது காண்பவர்களையும் உற்சாகப்படுத்துகிறது.போட்டிபோட்டு தாண்டியா ஆடுவதில் சிறந்து நடனம் ஆடுபவருக்கு 10வது நாள் அன்று பரிசுகளும் பணமும் தரப்படும் என்று விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாண்டியாநாட்டியமாடி நவராத்திரி பண்டிகை கொண்டாட்டம்,
 

Tags :

Share via