முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல்

by Staff / 07-10-2022 11:40:09am
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல்

திமுக உட்கட்சித் தோ்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது. இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவா்கள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. தற்போது தி.மு.க. தலைவராக உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவா் பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளார்.

 

Tags :

Share via