தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு.

by Editor / 08-10-2022 08:44:26am
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு.

 தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, திருவள்ளூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via