மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு -அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.விவசாயிகள் மகிழ்ச்சி.

by Editor / 28-07-2023 10:21:15am
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு -அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.விவசாயிகள் மகிழ்ச்சி.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாலும், கரை புரண்டு வரும் காவிரி நீரில் கரை ஓரங்களில் உள்ள மரங்கள் மரக்கிளைகள் அடித்து வரப்படுவதாலும் காவிரி கரையில் அடிப்பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூர் பகுதிகளில் முகாமிட்டு மீன் பிடித்து வந்த மேட்டூர் அணை மீனவர்கள் இன்று மீன் பிடிக்கச் செல்லவில்லை.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இரு அணைகளும் நிரம்பும் தருவாயில் இருப்பதால் அணைகளின் பாதுகாப்பை கருதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.இதனால் கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்துவருகிறது.நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 2,100கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை வினாடிக்கு 3343 கனஅடியாகவும் நேற்று மாலை 10,232கன அடியாகவும் அதிகரித்தது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,444கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

நேற்று மாலை 64.80அடியாக சரிந்து இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 64.90அடியாக உயர்ந்து உள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.அணையின் நீர் இருப்பு 28 .47 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாலும், கரை புரண்டு வரும் காவிரி நீரில் கரை ஓரங்களில் உள்ள மரங்கள் மரக்கிளைகள் அடித்து வரப்படுவதாலும் காவிரி கரையில் அடிப்பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூர் பகுதிகளில் முகாமிட்டு மீன் பிடித்து வந்த மேட்டூர் அணை மீனவர்கள் நீரின் இழுவை விசை அதிகமாக இருப்பதாலும் மரக்கிளைகள் அடித்து வரப்படுவதாலும் வலைகள் சேதமடையும் என்பதாலும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படும் என்பதாலும் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
 

 

Tags :

Share via