மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் இஞ்சின் சோதனை வெற்றி

by Editor / 28-07-2023 10:11:56am
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் இஞ்சின் சோதனை வெற்றி

நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ (ISRO) மையத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் இன்ஜின் தயாரிக்கப்பட்டு பல கட்டங்களாக பரிசோதனை நடத்தப்படுகிறது.

அதன்படி ககன்யான் ராக்கெட்டுக்கான சர்வீஸ் மாடியூல் ப்ரொபஷனல் சிஸ்டம் சென்ட்ரல் lpsc வடிவமைக்கப்பட்டு அதற்கான வெப்ப பரிசோதனை நடைபெற்றது.

700 வினாடிகளுக்கு நடத்தப்பட்ட இந்த வெப்ப பரிசோதனையில் எல் ஏ எம் என்ஜின்கள் மற்றும் ஆர்சிஎஸ் த்ரெஸ்டர்கள் தொடர்ச்சியான முறையில் துடிப்பு முறையில் சுடப்பட்டதாகவும் செயல் திறன், இயல்பாக இருந்ததாகவும் இஸ்ரோ மையம் தெரிவித்துள்ளது

 

Tags : மகேந்திரகிரி இஸ்ரோ ககன்யான் இஞ்சின் சோதனை

Share via