ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை; அதிமுகவின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி ஓபிஎஸ்

by Staff / 08-10-2022 01:34:26pm
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை; அதிமுகவின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி ஓபிஎஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது அஇஅதிமுகவின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, வரும் கூட்டத்தொடரிலேயே அவசரச் சட்டமாக இயற்றப்பட உள்ளது. சட்டம் இயற்றப்பட்ட பின் தமிழ்நாட்டுக்குள் எந்த ஒரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடமுடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via