இந்திய விஞ்ஞானிகள் நாடு திரும்ப ஆர்வம் மத்திய மந்திரி தகவல்

by Admin / 28-02-2022 11:03:12am
 இந்திய விஞ்ஞானிகள் நாடு திரும்ப ஆர்வம் மத்திய மந்திரி தகவல்

அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள உயிரி தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார்.  

வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகளை மீண்டும் தாய்நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் உருவாக்கப்பட்ட  ராமலிங்கசாமி அடைவு மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தரங்கத்தை அவர் தொடங்கி வைத்தார். 

பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ள அறிவு பூர்வமான அறிவியல் சூழல் காரணமாக, வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகள் பலர் நாடு திரும்புவதில் ஆர்வமாக உள்ளனர்.

வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானிகள் நாடு திரும்புவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள ராமலிங்கசாமி மறுநுழைவு ஆய்வுத்திட்டம், மிகவும் கவுரவமான திட்டம். 

கடந்த 36 ஆண்டுகளில், நாடு முழுவதும் உயிரி தொழில் நுட்பத்துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வி மற்றும் புதுமை கண்டு பிடிப்பில்  மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று தடுப்பை, உயிரி தொழில் நுட்பத்துறை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது.கொரோனா தொற்றை குறைப்பதிலும், தடுப் பூசிகள் உருவாக்கியதிலும் உயிரி தொழில்நுட்பத்துறை முக்கிய பங்காற்றியுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை வகுப்பதற்கான அதிகாரம் உயிரி தொழில்நுட்பத் துறைக்கு உள்ளது.  

உற்பத்தி வளர்ச்சி நோக்கிய ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதவள மற்றும் கட்டமைப்பு திறன் உருவாக்கம், தேசிய மற்றும் சர்வதேச கூட்டுறவு மூலம் இது சாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via