முதன்முறையாக சீனாவின் பறக்கும் கார்

by Staff / 12-10-2022 11:29:15am
முதன்முறையாக சீனாவின் பறக்கும் கார்

சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த மின்சார கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படிஎக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும் கார் ஒன்று, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றது. ஒரு மூலைக்கு இரண்டு என மொத்தம் நான்கு மூலைகளிலும் எட்டு மின்சார இறக்கைகள் இந்த காரில் இணைக்கப்பட்டுள்ளன. அவை இந்த காரை மேலே எழும்ப செய்வதற்கும், தரையில் கீழே இறங்குவதற்கும் உதவி புரியும். துபாயில் இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் ஒன்றரை மணிநேரம் நடத்தப்பட்டது. அதில் ஆளில்லாமல் கார் இயக்கப்பட்டது.

 

Tags :

Share via