பள்ளிகளில் இலவசமாக படம் பார்க்கலாம்

by Staff / 13-10-2022 12:12:54pm
பள்ளிகளில் இலவசமாக படம் பார்க்கலாம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுதும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது, அரசு பள்ளிகளில் உள்ள 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திரைப்படங்கள் திரையிடப்படப்படுகிறது. மாதம்தோறும் இரண்டாவது வாரம் இந்த படங்கள் திரையிடபடுகின்றன.இந்த வாரம் பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சில் வெளியான குறும்படமான "The Red Balloon" என்ற படம் திரையிடப்படுகிறது. 1956ல் பிரெஞ்சில் வெளியான இந்த படத்தை ஆல்பர்ட் லெமோரிஸ் இயக்கியிருந்தார். ஆஸ்கர் விருதுபெற்ற இந்த குறும்படம் இன்று மாணவர்களுக்கு திரையிடப்படுகிறது.

 

Tags :

Share via