மாணவி பள்ளிக்குச் செல்லேவே பயமாக இருக்கிறது

by Staff / 16-10-2022 01:05:08pm
 மாணவி பள்ளிக்குச் செல்லேவே பயமாக இருக்கிறது

அந்த மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லவே பயமாக இருக்கிறது. ஒய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் மாணவிகள் அடுக்கடுக்காக கூறிய குற்றச்சாட்டுகளால் சலசலப்பு. மாநிலக் கல்விக் கொள்கை க குறித்து திருவாரூர் நாகப்பட்டினம் தஞ்சாவூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் பேசிய நீதிபதி முருகேசன் மாணவ மாணவிகள் முதலில் தங்கள் கருத்துகளையும் குறைகளையும் தெரிவிக்கலாம் என்று கூறினார். 

இதனையடுத்து பேசிய பூம்புகார் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவி மாதவிடாய் காலத்தில் பள்ளிக்குச் செல்லேவே பயமாக இருக்கிறது.நாங்கள் எட்டு மணி நேரம் பள்ளியில் தான் இருக்கிறோம்.விடாய் காலங்களில் நாப்கினை உரிய முறையில் அப்புறப்படுத்துவதற்கு கூட இடமில்லை என்று குற்றச்சாட்டு கூறினார். அதற்கு முன்பு பேசிய பணியை சேர்ந்த மாணவி எங்கள் பள்ளியில் 3000 மாணவர்கள் கல்வி பயில்கின்றோம்.ஆனால் அந்த பள்ளியில் 30 கழிவறைகள் மட்டுமே உள்ளன. அதில் 15 கழிவறைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.15 கழிவறைகளில் 3000 மாணவர்களும் 10 நிமிட  இடைவேளையில் எப்படி சென்று வர முடியும் எனவே பள்ளிகளில் கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று அவர் பேசினார். 
மேலும் ஒரு மாணவி கண்கலங் கியபடி பேசுகையில்  சத்துணவு சாப்பிடுவதற்கே பிடிக்கவில்லை.அங்குள்ள பாத்திரங்கள் சுத்தமாக இல்லை மேலும் கழிவறைகளும் அசுத்தமாக உள்ளது.கணினி மூலமாக மாணவர்களுக்கு பாடம் எடுக்கக் கூடாது.காரணம் வசதியானவர்கள் வீட்டில் கணினி உள்ளது ஏழ்மையான மாணவர்கள் வீட்டில் கணினி வசதி இல்லை.18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுவதை தடை செய்ய வேண்டும்.ஆன்லைன் கேமையும் தடை செய்ய வேண்டும் என்று அந்த சிறுமி கண் கலங்க பேசினார். 

வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர் பேசுகையில் எங்கள் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர் 20 குழந்தை தொழிலாளர்களை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளார்.அந்த குழந்தைகளிடம் நாங்கள் கேட்கும் போது ஆசிரியர்கள் எங்களை அம்மா படுத்த விதமாக உருப்பட மாட்டேன் என்று திட்டியதால் குழந்தை தொழிலாளர்களாக மாறியதாக தெரிவிக்கிறார்கள்.எனவே ஆசிரியர்கள் மாணவர்களிடம் இது போன்ற நடந்து கொள்ளாமல் அவர்களிடம் தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார். மேலும் ஒரு மாணவி பேசுகையில் தாய்மொழி வழிக் கல்வியில் பயில்வதால் எங்களுடைய பேச்சாற்றல் சிந்திக்கும் திறன் எழுத்தாற்றல் ஆகியவை வளர்கிறது. ஆகையால் தாய்மொழி வழி கல்வியை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார். மாநில கல்வி கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் முன்னிலையில் மாணவிகள் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பியது அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

 

Tags :

Share via