தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் வழங்கிய சூர்யா

by Staff / 16-10-2022 01:40:08pm
தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் வழங்கிய சூர்யா

கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான நவீன வாகனத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் நன்கொடையாக அளித்துள்ளது. இந்த வாகனத்தை நடிகர் சூர்யா சார்பாக அவரது தந்தை நடிகர் சிவக்குமார், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி மன்ற தலைவரான வள்ளி எட்டியப்பனிடம் வழங்கினார். நடிகர் சூர்யா, திரையுலக நலன், மாணவ மாணவிகளின் கல்விச் செலவு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காகவும் இயன்ற அளவில் உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார். இவரது சமூக சேவையை திரையுலகினரும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via