இனி ட்விட்டர் சேவைகளை பெற கட்டணம்

by Staff / 31-10-2022 11:13:51am
இனி ட்விட்டர் சேவைகளை பெற கட்டணம்

உலகம் முழுவதும் அதிகமானோர் பயன்படுத்தப்படும் சமூகவலைதள செயலிகளில் முக்கியமான இடத்தில் ட்விட்டர் உள்ளது. ட்விட்டரில் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்களும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.இவர்களை பின்தொடர்பவர்களும் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரபலமானவர்களின் கணக்குகளுக்கு ட்விட்டர் ப்ளூ டிக் வழங்கி வருகிறது. தற்போது ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் இந்த ப்ளூ டிக் வசதிகளை பெற மாதம் ரூ.1800 செலுத்த வேண்டும் என அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை ப்ரொமோட் செய்தல் உள்ளிட்ட வணிக ரீதியான பயன்பாடுகளுக்கும் ட்விட்டரில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி அதற்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via