16.5 லட்சம் பறி கொடுத்த ஐ.டி.ஊழியர் போலீஸ் கமிஷனரிடம் முறையீடு!

by Editor / 05-11-2022 08:57:04am
  16.5 லட்சம் பறி கொடுத்த ஐ.டி.ஊழியர்  போலீஸ் கமிஷனரிடம் முறையீடு!

சென்னை, நீலாங்கரையை சேர்ந்தவர் குமார்(39).ஐடி ஊழியர்.ஒரு ஆன்லைன் மோசடி கும்பல் விரித்த வலையில் இவர் சிக்கினார். ஒரு பன்னாட்டு சுற்றுலா நிறுவனம் பெயரில் இந்த கும்பல் இவரிடம் அறிமுகமானது. கொரோனாவுக்கு பிறகு சுற்றுலாத்துறை உலக அளவில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருவதாகவும், தங்களுடன் இணைந்து பணியாற்றினால் குறுகிய காலத்தில் நிறைய வருவாய் ஈட்டலாம் என்று ஆசை காட்டி வசப்படுத்தியது.

இவரிடம் கடந்த 16.10.22 முதல் 24.10.22 வரை 9 நாளில் அடுத்தடுத்து 16.5 லட்சம் ரூபாய் சுருட்டியுள்ளது இந்த கும்பல். முதலில் 30,000 ரூபாய் முதலீடு செய்ய சொல்லி 24 ஆயிரம் கமிஷன் கொடுத்துள்ளது. பின்னர் அடுத்தடுத்து பணத்தை கறந்து எடுத்துள்ளது.

பர்சனல் லோன் எடுக்க வைத்து 16.5 லட்சம் ரூபாயை சுருட்டி கொண்ட இந்த கும்பல் மேற்கொண்டு ரூபாய் 42 லட்சம் பறிக்கத் திட்டமிட்டபோது சுதாரித்துக் கொண்டார்.தான் பறி கொடுத்த 16.5 லட்சத்தை மீட்டு தரக்கூடிய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவாலிடம்
இன்று நேரில் முறையிட்டார். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via