நாட்டியாஞ்சலி விழாவின் நிறைவு விழா ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு..போலீசார் அதிகளவில் குவிப்பு.

by Editor / 23-02-2023 09:17:14am
 நாட்டியாஞ்சலி விழாவின் நிறைவு விழா ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு..போலீசார் அதிகளவில் குவிப்பு.

 சிதம்பரத்தில் மஹா சிவராத்திரி விழாவினை முன்னிட்டு சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் சார்பில் 42 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதியில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று இரவு நாட்டியாஞ்சலி விழாவின் நிறைவு விழா நடைபெற்றது.இந்த நிகழ்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். அதனையடுத்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இதன் பின்னர் இன்று காலை சுமார் 8 மணியளவில் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் வந்த ஆளுநருக்கு கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் ”பூர்ண கும்ப” மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கனசபை மீது ஏறி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

அதனையடுத்து நந்தனார் மடத்திற்க்கு சென்று நந்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிலையில் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முயற்ச்சிக்கலாம் என்பதால் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் வழக்கமாக கோவிலுகு வரும் பக்தர்கள் பலத்த சோதனைகளுக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via