நூற்றாண்டைக்கடந்த திருச்செந்தூர் -திருநெல்வேலி ரயில் போக்குவரத்து சேவை.

by Editor / 23-02-2023 09:44:05am
நூற்றாண்டைக்கடந்த திருச்செந்தூர் -திருநெல்வேலி ரயில் போக்குவரத்து சேவை.

 

 திருச்செந்தூர் -திருநெல்வேலி ரயில் போக்குவரத்து சேவையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரயில்வே பணியாளர்களுக்கும்,  பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

திருச்செந்தூர்-திருநெல்வேலி இடையே தொடங்கப்பட்ட ரயில் போக்குவரத்து சேவையின் நூற்றாண்டு விழா ஆறுமுகநேரி ரயில்வே வளர்ச்சி குழு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு முதன் முதலாக கடந்த 1923 ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி ரயில் போக்குவரத்து சேவை துவங்கப்பட்டது. இந்த ரயில் போக்குவரத்து சேவையின் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆறுமுகநேரி ரயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி தலைமையில்  திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில் பூ மாலைகளுடன்  அலங்கரிக்கப்பட்டது.மேலும்  ரயில் ஓட்டுநர்களும்,  ரயில்வே பணியாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து இரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர் மற்றும் நாசரேத் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் இரயில் சேவை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரயிலுக்கு உற்சாசகமாக வரவேற்ப்பு அளித்து அந்தந்தப்பகுதி மக்கள்  கொண்டாடினர்.

 

Tags :

Share via