உஷா மார்டின் நிறுவனத்தின் லாபம் 7% உயர்வு

by Staff / 09-11-2022 04:57:19pm
உஷா மார்டின் நிறுவனத்தின் லாபம் 7% உயர்வு

கம்பி கயிறு உற்பத்தி நிறுவனமான உஷா மார்ட்டினின் நிகர லாபம் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் 7% வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது இந்த நிறுவனம் ரூ.45.9 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 42.05 கோடி நிகர லாபம் ஈட்டி இருந்தது. உஷா மார்ட்டின் இங்கிலாந்து, பாங்காங், துபாய் ஆகிய நாடுகளில் வர்த்தகம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via