மகேஷ்பாபுவின் தந்தை மரணம்... முதல்வர் இரங்கல்

by Staff / 15-11-2022 11:30:17am
மகேஷ்பாபுவின் தந்தை மரணம்... முதல்வர் இரங்கல்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா(79) காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சில மாதங்களுக்கு முன்னர்தான் கிருஷ்ணாவின் மனைவி காலமானார். தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா. 325 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், "பழம்பெரும் தெலுங்கு நடிகர் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மறைவு வருத்தமளிக்கிறது. தெலுங்கு சினிமாவில் பல புதுமைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் கிருஷ்ணா. அவரது மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via