வேலை நீக்கம் எந்த நிறுவனமும் விதிவிலக்கல்ல

by Editor / 23-11-2022 08:04:58am
வேலை நீக்கம் எந்த நிறுவனமும் விதிவிலக்கல்ல

கூகுள் நிறுவனம் ஏற்கனவே ஒரு சில ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை இருப்பதன் காரணமாக முக்கிய நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். முன்னதாக, அமேசான், பேஸ்புக், ட்விட்டர் உள்பட பல நிறுவனங்களில் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோன்று, கூகுள் நிறுவனத்தில் 10,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். பணியாளர்களின் செயல்திறன் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யுமாறு அந்தந்த பிரிவின் மேலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

Tags :

Share via