குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 - அரசு தீவிர ஆலோசனை

by Staff / 25-11-2022 12:56:56pm
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 - அரசு தீவிர ஆலோசனை

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை மார்ச் 3ம் தேதி தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளது. முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவுக்கு உதவ துணைக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்த பின், மாதந்தோறும், மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via