தியானம்- பிராயணயாமம் செய்யும் வழி முறைகள்.

by Admin / 01-12-2022 11:11:30am
தியானம்- பிராயணயாமம் செய்யும் வழி முறைகள்.


காலையில் இருபது நிமிடம் மாலையில் இருபது நிமிடம் தினந்தோறும் தியானம் செய்யுங்கள்.உடலும் மனதுமயபுத்துணர்ச்சி பெறும்.காலையில் குளித்த பின்பு கடவுளை வழிபடுங்கள்.ஓர் ஐந்து நிமிடம் கண்களை மூடி ஆழ்ந்து பிரார்த்தனைசெய்யுங்கள்.கிட்டதட்ட தவம் செய்வது போல் உங்களுக்கு எந்த சாமி படத்தை வணங்க வேண்டுமோ அந்த படம் முன்பாக அமருங்கள். விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. கடவுள் வழிபாட்டிற்கு பின்பு மெல்ல கண்களை மூடி...உங்கள் பார்வையை அதாவது உங்கள் கவனத்தை இரண்டு கண்களுக்கு இடையில் உள்ள நெற்றிக்கண் பகுதியில்கொண்டு சென்று இறைவனை நினையுங்கள்.லேசாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு இருங்கள்.ஆனால்,மூச்சை முழுமையாக இழுத்து முழுமையாக விடவும்.மூச்சை விட்டு விட்டு  வருதல்  போன்று செய்தல் கூடாது.தொடர்ந்து கண்களை மூடியவாறே அமர்ந்து இருக்கவும்.உங்கள் கவனம் நெற்றிக்கண்ணில் இருக்க வேண்டும் .உங்களைச்சுற்றியுள்ளஒலிகளைக் கேளுங்கள்.கொஞ்ச நாள்கள் வரை இந்த சப்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்.பின்பு மெல்ல மெல்ல..உங்கள் செவிகளில் கேட்காதநிலை வரும்.இந்நிலையில்,தினமும் அமர்ந்து கடவுளை மட்டுமே மனதில் நினையுங்கள்.இப்படி தினமும் ஒர் இருபது நிமிடம் ஒதுக்கி வைத்து தியானம் செய்தால் ,மனம் உங்கள் கட்டுப்பாட்டில் வரும்.மனமது வசமானால் மண்ணில் எதையும் வசப்படுத்தலாம்.
பிராணயாமம்-
உணவும் நீரும் நமது  உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் சுத்தமான காற்று.இதற்கு பிராணயாம  பயிற்சி  நமக்கு   தேவைப்படுகிறது. தியானம் செய்வது போன்று அமர்ந்து   ,கட்டை  விரலால் b மூக்கின்  இடது  பக்கத்தை மூடிக்கொண்டு மூக்கின் வலது துவாரம் வழியாக காற்றை இழுக்கவும் .இவ்வாறு தினமும் காலை மாலையில் இருநேரமும் ஐந்து வினாடிகள் செய்யவும்.பிறகு காற்றை ஏழு அல்லது எட்டு வினாடிகள் அடக்கி வைக்க வேண்டும் .பறகு மூக்கின் வலது துவாரம் வழியாக 4 வினாடி நேரம் காற்றைஇழுக்கவும்.பின்பு 8 வினாடி அடக்கவும்பிறகு வலது துவாரத்தை கட்டை விரலால் மூடிக்கொண்டு  இடது துவாரம் வழியாக மூச்சை விடவும்.மூச்சை விடுவதற்கு8 வினாடி நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூக்கின் வலது துவாரத்தை மூடிக்கொண்டு இடது துவாரம் வழியாக 4வினாடி நேரம் காற்றை இழுக்க வேண்டும் .பிறகு 8வினாடி நேரம் மூச்சை அடக்க வேண்டும்.பிறகு இடது துவாரம் வழியாக 8 வினாடி நேரம் மூச்சை வெளியிட வேண்டும்.இவ்வாறு மூக்கின் இடப்பக்கம் இரண்டு முறை வலப்பக்கம் இரண்டு முறை செய்யவும்.
.

 

Tags :

Share via